Monday, February 5, 2007

வரி விளம்பரங்கள் - அறிமுகம்

அன்பு வலைப்பதிவு நண்பர்களே. இனிய இணைய உலவிகளே உங்களுக்கென வலைப்பதிவில் ஒருபுதிய சேவையை உருவாக்குவதில் மகிழ்ச்சி.

பல வரி விளம்பரத் (Classifieds) தளங்கள் இணையத்தில் இருக்கின்றன. இருப்பினும் தமிழில் இயங்குவதும், எளிதில் மின்னஞ்சல் வாயிலாகவோ, பின்னூட்டங்கள் வாயிலாகவோ உதவிகளைப் பெறுவதும் வழங்குவதும், பொருட்களை வாங்குவது விற்பதும் செய்ய இயலுமா எனும் கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சி இது.

உங்கள் விளம்பரங்களை vari.vilamparam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம். தேவையான தகவல்களை அதில் தாருங்கள். அல்லது பின்னூட்டங்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இது இலாப நோக்கற்ற ஒரு முயற்சி என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

பரிட்சார்த்தமான இந்த முயற்சி, ஆதரவிருந்தால் விரைவில் ஒரு குழு வலைப்பதிவாக விரிவுபெறும்.

என்னென்ன வரி விளம்பரங்கள் தரலாம்?

பொருட்களை வாங்க விற்க என்பதோடு மட்டுமல்லாமல் பிற உதவிகளையும் வேண்டிப் பெற அழைக்கிறோம் உதாரணம் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் வயதானவர்களுடன் பயணிக்க, தங்கும் அறை பகிர்தல் குறித்த தேவைகள் என எல்லா தேவைகளையும் தெரிவிக்கலாம்.

இது உங்களுக்கான சேவை. இதை உருப்படியாக பயன்படுத்துவது உங்கள் கையில் உள்ளது.

வரி விளம்பரம் படம்